மதுரை:

துரை கீரைதுறை பகுதி திமுக செயலாளர் எம்.எஸ் பாண்டியன் மீது 5பேர் கொண்ட கும்பல் சரமாரி தாக்குதல் இதில் பலத்தகாயம் அடைந்த பாண்டியன் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்விரோதம் காரணமாக  மதுரை செயின்ட் ஜோசப் பள்ளி அருகே திமுக பகுதி செயலாளர் எம்.எஸ். பாண்டியனை  5பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த பாண்டியன் உடடினயாக மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியின் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி. திமுகவை சேர்ந்தவர். இவரது மருமகன் எம்.எஸ். பாண்டியன்.முன்விரோதம் காரணமாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவரும் அதிமுகவை சேர்ந்தவருமான ராஜபாண்டியன் தரப்பினர் கீழவெளி வீதி பகுதியில் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் எம்எஸ்பாண்டியன் உயிரிழந்தார்.