நாயின் நினைவாக அனவருக்கும் டென்னிஸ் பந்து பரிசளிக்கும் விநோத மனிதர்!

Must read

1dogதான் ஆசையாய் வளர்த்த செல்ல நாயின் நினைவாக அனைவருக்கும் டென்னிஸ் பந்து பரிசளித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ஒரு வித்தியாசமான மனிதர்.
கிறிஸ் சாண்டாக்ராட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர். இவர் 12 வருடங்களாக ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்திருக்கிறார். அதுவே அவருக்கு எல்லாமாக இருந்தபடியால் அதற்கு “எவிரிதிங்” என்று பெயரிட்டு மகிழ்ந்துள்ளார். ஆனால் எவிரிதிங் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டது.
தனது நாயின் நினைவாக அவர் 100 டென்னிஸ் பந்துகளை வாங்கி யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதை அனுப்பி வைத்துள்ளார்.
“யாருக்கெல்லாம் பந்து கிடைத்ததோ அவர்கள் எல்லோரும் தங்களுக்கு பிரியமானவர்களுடன் நேரம் செலவிடுங்கள். அதுவே எனது விருப்பம்” என்ற செய்தியையும் அனுப்ப அவரது இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
ஒரே நாளில் அவருக்கு இன்ஸ்டகிராமில் 8000 லைக்குகள் கிடைத்திருக்கிறது
தனது செல்ல நாயை இழந்தாலும் அதனுடன் கழித்த நாட்களின் இனிமையான நினைவுகளை அசைபோடும் கிறிஸ் இன்னும் டென்னிஸ் பந்துகளை பலருக்கும் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article