கோவை: கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் தலைவர் யுவராஜை கோவை சிறைக்கு மாற்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் ஜாதி தலைவர் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. யுவராஜ் சாகும் வரையில் சிறையில் இருக்கும்படி 3 ஆயுள் தண்டனையை நீதிபதி அளித்துள்ளார்.
இதுவரை யுவராஜ் 4 மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர்மீதான தண்டனை அறிவிக்கப்பட்டு விட்டதால், யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…