
திரைப்பட நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகை ஹனி ரோஸும் சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். கேரளாவில் ஆற்றுப் பகுதியில் இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.
சேலை கட்டியபடி, அதிகமான பாறைகள் நிறைந்த ஆற்றுப் பகுதிக்குள் நின்று போட்டோஷூட்டில் கலந்துகொண்டார் ஹனி ரோஸ். அப்போது திடீரென சேலை தடுக்கியதால், தவறி கீழே விழுந்தார். அவரை போட்டோஷூட் குழுவினர் ஓடி சென்று தூக்கினர்.
மலையாள திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் ஹனி ரோஸ். கடந்த 2005-ம் ஆண்டு பாய் பிரண்ட் எனும் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
Patrikai.com official YouTube Channel