மும்பை: ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில பாஜக சிவசேனா கூட்டணி அரசு அறிவித்துள்ளது. இதை வரவேற்றுள்ள ஹோமியோபதி மருத்துவர்கள், இதுபோல அனைத்து மாநிலங்களிலும் அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அலோபதி மருத்துவர்கள் போல, ஹோமியோபதி மருத்துவர்களும் ஐந்தரை ஆண்டுகள்தான் மருத்துவம் படிக்கின்றனர். மருத்துவம் தொடர்பான இரு தரப்பும் ஒரே படிப்பையே படித்து வரும் நிலையில், Pharmacology எனப்படும் மருந்தியல் தொடர்பான ஒரு சப்ஜெக்ட் மட்டுமே மாற்றி படிக்கிறார்கள். அதாவது ஹோமியோபதி மருத்துவர்கள் Pharmacology பதில் materia medica & organon என்ற சப்ஜெக்டை படிக்கிறார்கள். அதைத்தொடர்ந்து, internship காலக்கட்டத்திலும் ஹோமியோபதி பிரிவில் பணியாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மற்றபடி அதிக வித்தியாசம் ஏதும் இல்லை.
இந்த நிலையில், ஐந்தரை ஆண்டுகள் படித்துவிட்டு வெளியே வரும் ஹோமியோபதி மருத்துவர்களும் நவீன அலோபதி தொடர்பான சான்றிதழ் படிப்பை படித்து தேர்ச்சி பெற்றுவிட்டு , அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்றும், அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
அதாவது, ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருந்தியலில் சான்றிதழ் படிப்பை (CCMP) முடித்துவிட்டு, அலோபதி மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்து அலோபதி மருத்துவம் பார்க்கலாம் என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அரசாணைக்கு அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். “இந்த முடிவு தேசிய அளவிலும் உலக அளவிலும் மருத்துவ ஒழுங்குமுறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது என்று குற்றம் சாட்டி உள்ளது.
இந்தியாவில் அலோபதி படிப்புக்கு இணையாக ஆயுஷ் (AYUSH – Ayurveda, Yoga & Naturopathy, Unani, Siddha, and Homeopathy) படிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா, நேச்சுரோபதி போன்ற படிப்புகளும் அலோபதி படிப்புகளைப்போல ஐந்தரை ஆண்டுகள் படிக்க வேண்டியது உள்ளது. இதில், ஹோமியோபதி படிப்புகான நான்கரை ஆண்டு படிப்புகளில், மூன்றரை ஆண்டு படிப்புகள் முழுவதும் அலோபதி சம்பந்தப்பட்டவையே. நான்காவது ஆண்டு மட்டுமே, நோய்களுக்கான மருந்துகள் வேறுபடுத்தி கற்பிக்கப்படுகிறது. மேலும், இவர்களும் படிக்கும்போதே கடாவர் மூலம் சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் செய்து தங்களை மேம்படுத்திக்கொள்கின்றனர். இதனால், பல ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிசை அளிப்பதில் தயக்கம் காட்டுவது இல்லை. மருந்துகள் மட்டுமே மாற்றப்படுகிறது. மற்றவை அனைத்து பரிசோதனைகளும் அலோபதி போலவே ஹோமியோபதி மருத்துவத்திலும் காணப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பல தனியார் மருத்துவமனைகளில் அலோபதி மருத்துவர்களும் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிர மருத்துவ கவுன்சில் கடந்த ஜூன் 30-ம் தேதி ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், “நவீன மருந்தியல் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சிலில் முறைப்படி பதிவு செய்யலாம். அதன்பிறகு அவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாம். அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம்’’ என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலஅரசின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் உள்ள ஹோமியோபதி மருத்துவர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அலோபதி மருத்துவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2014-ம் ஆண்டில் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி மருந்தியல் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்த ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம், அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டில் சிசிஎம்பி என்ற மருந்தியல் படிப்பு தொடங்கப்பட்டது.
இந்த சூழலில் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சில் கடந்த ஜூன் 30-ம் தேதி ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், “நவீன மருந்தியல் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சிலில் முறைப்படி பதிவு செய்யலாம். அதன்பிறகு அவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாம். அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம்’’ என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்க , நவீன மருந்தியலில் ஒரு குறுகிய ஆறு மாத சான்றிதழ் படிப்பு (CCMP – Completed the Certificate Course in Modern Pharmacology) படித்து தேர்ச்சி பெற வேண்டும். இதன்மூலம், மகாராஷ்டிரா மாநிலஅரசின் ஜூன் 30 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் MMC, ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர அரசின் முடிவை ஹோமியோபதி மருத்துவர்கள் வரவேற்று உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “பல்வேறு எம்பிபிஎஸ் மருத்துவர்கள், தங்கள் நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர். நாங்கள் முறையாக மருந்தியல் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்துள்ளோம். எங்கள் நோயாளிகளுக்கு தேவையான அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது. மகாராஷ்டிர அரசின் முடிவை முழுமனதோடு வரவேற்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.
ஆனால் மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐஎம்ஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர ஐஎம்ஏ தலைவர் சந்தோஷ் கூறும்போது, “மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவர்கள், பல்வேறு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளை நடத்துகின்றனர். அவர்களின் அழுத்தத்தால் மகாராஷ்டிர அரசு புதிய அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. இந்த அரசாணையை எதிர்த்து சட்டரீதியாக போராடுவோம்’’ என்று தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ள நிலையில், அவர்கள் ஐந்தரை ஆண்டு படித்துவிட்டு வெளியே வரும்போது, அவர்களின் சிகிச்சைக்கு போதிய அளவில் வரவேற்பு இல்லை. இது, அந்த மருத்துவர்களுக்கு மனஅழுத்தத்தை உருவாக்குகிறது. அதனால், அவர்கள் தங்களுக்கும் அலோபதி சிகிச்சை அளிக்க அனுமதி வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை பரிசிலிப்பதாக மத்தியஅரசு உறுதி தெரிவித்திருந்தது. ஆனால், அலோபதி மருத்துவர்களின் போராட்டம் காரணமாக, மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு, அலோபதி மருத்துவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், அதிரடியாக ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன அலோபதி மருந்துகள் குறித்த சான்றிதழ் படிப்பை முடித்துவிட்டு, அலோபதி மருத்துவம் பார்க்கலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது.
தங்களது ஐந்தரை ஆண்டுகால மருத்துவ படிப்பில் சுமார் 75சதவிகதம் அலோபதி படிப்புகளை படித்து தேர்ச்சி பெற்றுள்ள ஹோமியோபதி மருத்துவர் கள் சில மாதங்கள் பயிற்சி பெற்றாலே அலோபதி மருத்துவம் பார்க்க முடியும். அப்படி இருக்கையில் அவர்கள் அலோபதி மருத்துவம் பார்க்கக்கூடாது என்று கூறுவது தேவையற்றது. மருத்துவ மாஃபியாக்களின் கைப்பிடியில் உள்ள அலோபதி மருத்துவர்களின் போராட்டம் என்பது தேவையற்ற ஆணி.
உண்மையிலேயே அலோபதி மருத்துவர்களுக்கு அக்கறை இருந்தால், ஹோமியோபதி மருத்துவவ படிப்பை, பாடத்திட்டத்தில் இருந்து முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க போராடலாம். அதுபோல, இந்த படிப்பை மத்திய, மாநில அரசுகளின் பாடத்திட்டத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வரலாம். அதை விடுத்து, பல நூறு இளம் தலைமுறையினர் தங்களது மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில், வாழ்வின் ஒரு பகுதியாக சுமார் ஐந்தரை ஆண்டு காலம் கடுமையாக உழைத்து, படித்து, ஹோமியோபதி மருத்துவர்களாக வெளியே வரும் நிலையில், அவர்களின் வாழ்வதாரத்தை பாழாக்கும் வகையில், அவர்களுக்கு எதிராக அலோபதி மருத்துவர்கள் செயல்படுவது, அதிகார துஷ்பிரயோகம், இது எந்த வகையிலும் நியாயம் கிடையாது என்று ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.
மூன்று முதல் நான்கரை ஆண்டுகள் வரை படித்துவிட்டு வெளியே வரும் பிசியோதெரபிகளை டாக்டர்கள் என போடலாம் என மத்திய அரசு அறிவித்துள் ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத அலோபதி மருத்துவர்கள் சங்கம் ஐந்தரை ஆண்டுகள் முழுமையாக படித்துவிட்டு வெளியே வரும் ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் பார்க்கக்கூடாத என அவர்களுக்கு எதிராக போராடுவது தேவையற்றது.