sonia 1
பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி செய்துவரும் ஆளும் கட்சியான பா.ஜ.க., பாராளுமன்றதிற்குன் உள்ளேயும், வெளியிலும் சோனியா காந்தி மற்றும் ப.சிதம்பரத்தை தொடர்புபடுத்தி , இஷ்ரத் ஜகான் வழக்கில் ஆவணங்களை திருத்தியதாக புகார் தெரிவித்து பெரும் அமளியில் ஈடுபட்டது. பா.ஜ.க.வின் ஆதரவு தொலைக்காட்சி ஊடகங்களும் அதனை முக்கிய விவாதப் பொருளாக்கி சோனியா ம்ற்றும் சிதம்பரம் மீது அவதூறு பரப்பி வந்தன. சிதம்பரம் இஷ்ரத் ஜகான் வழக்கு குறித்த ஆவணத்தில் சோனியாவின் வற்புறுத்தலின் பெயரில் மாற்றங்கள் செய்து இரண்டாவது ஆவணத்தை தாக்கல் செய்ததாக அவதூறு பரப்பிவந்தது குறிப்பிடத்தக்கது.
download (4) images
 
 
 
 
 
 
 
 
இந்நிலையில், டெஹ்சீன் பூனவல்லா எனும்   சுயதொழில் முனைவர் ,  RTI ஆர்வலர் மற்றும்  ராபர்ட் வத்ராவின் உறவினர்,  கடந்த ஏப்ரல் 24 அன்று  மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்த ஆர்.டி.ஐ. மனுவில்  இஷ்ரத் ஜகான் வழக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தயாரிக்கப்பட்ட வழக்கு விசாரணை ஆவணங்களில் சோனியா காந்தியின் நேரடி அல்லது மறைமுக குறுக்கீடு குறித்த  ஆதாரங்களை வழங்குமாறு” கோரியிருந்தார்.

டெஹ்சீன் பூனவல்லா

 
 
sonia no involvement ishrat
இந்த மனுவிற்கு மே 23 அன்று உள்துறை சார்பாக துணைச் செயலாளர் எஸ்.கே.சிக்கரா  எழுதியுள்ள பதிலில் “கீழே கையெழுத்திட்டுள்ள தலைமை தகவல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சக  அலுவலகத்தில்இந்த வழக்கு குறித்து தாங்கள் கோரியுள்ள ஆவணங்கள்  எதுவும் இல்லை ” என்று கூறப்பட்டுள்ளது.
 
உள்துறையின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், இரண்டாண்டுகளை முடித்து வெற்றிவிழாவை ஆடம்பரமாய் கொண்டாடிவரும் பாஜக அரசிற்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் ஜால்ராவாய்  மாறியுள்ள  டைம்ஸ்நவ் உள்ளிட்ட ஊடகங்கள் சோனியாகாந்தியை குறிவைத்து அவ்ருக்கு எதிராக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
modi 1
வெற்றிவிழா வரவேற்பில் பிரதமர் நரேந்திர மோடி (படம்: நியூஸ்18)

நன்றி  :1