தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும் தேனீக்கள், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக, அழிந்து வருகிறது. ஆனால், தேனீக்கள் காக்கும் நடவடிக்கையில் ஹாலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.
பூச்சி இனங்களில் மனிதனுக்கு உதவுவதில் முன்னிலை வகிப்பது தேனீ. இது உற்பத்தி செய்யும் தேன், பல்வேறு நோய்களுக்கு அரு மருந்தாக உள்ளது அனைவரும் அறிந்தது. தற்போதைய டிஜிட்டல் உலகில், தேனீக்கள் போன்ற பூச்சி இனங்களும் அழிந்து வருகின்றன.
இந்த நிலையில், தேனீக்களை காப்பாற்ற பல நாடுகள் முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஹாலந்து, நெதர்லாந்து நாடுகளில் தேனீக்களை வளர்க்க அசத்தலான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஹாலந்து நாட்டில், தேனீக்களுக்காக நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தத்தின் மேற்கூரையில் மலர்ச்செடிகளை வளர்த்து பராமரித்து வருகிறது.
நெதர்லாந்தில் உள்ள ஒரு நகரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்களின் கூரைகள் தேனீவுக்கு பரிசாக தாவரங்களில் மூடப்பட்டுள்ளன, மழைக்காலங்களில் பஸ் நிறுத்தத்தின் மேற்கூரைகளில் சேமிக்கப்படும் மழைநீரைக் கொண்டு தாவரங்களை உருவாக்கி, அதை தேனீக்கள் வாழ பரிசாக வழங்கி வருகிறது. மொத்தம் 316 உட்ரெக்டில் பசுமையில் மூடப்பட்டுள்ளன.
பேருந்து நிறுத்தங்களின் கூரைகள், சாலைகளின் நடுவிலும் பிளாட்பாரங்கள் போல அமைத்து, வண்ண வண்ணப் பூச்செடிகளை அமைத்து தேனீக்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது. இதனால் சாலைகளும் அழகாகக் காட்சியளிக்கின்றன. தேனீக்களும் வளர்கின்றன. இந்தச் சாலைகளை “ஹனி ஹைவே’ என்று அழைக்கிறார்கள்.
இதுபோன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நிலையில், பல்லுயிரியர்களும் வாழ வகை செய்கின்றன. அத்துடன் மழைநீரை சேமிக்கவும் உதவியாக உள்ளது.
அதுபோல மின்சாரத்தால் இயக்கப்படும் பேருந்து உள்பட பல வாகனங்களின் மேற்கூரைகளிலும் மூக்கில்களைக் கொண்டு, தேனீக்கள் வசிக்கும் வகையில் கூண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காற்றின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.
நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 55 புதிய மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தவும், 2028 க்குள் “முற்றிலும் சுத்தமான பொது போக்குவரத்தை” கொண்டுவரவும் நகரம் இலக்கு கொண்டுள்ளது. இதற்கு தேவையான மின்சாரம் டச்சு காற்றாலைகளில் இருந்து நேரடியாக கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி இங்குள்ள குடியிருப்பாளர்கள் தங்கள்வீட்டின் கூரைகளை (மாடிகளை) பசுமை கூரைக்களாக மாற்ற நிதி உதவியும் வழங்கி வருகிறது.
நெதர்லாந்தின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமில் பல இடங்களில் “தேனீ ஹோட்டல்’ என்ற பெயரில் மரக்கட்டைகள் மற்றும் மூங்கில்கள் மற்றும் தேவையற்ற பொருட்களைக் கொண்டு பல தேனீக்கள் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஹோட்டல்களில் இப்போதே பலவிதமான தேனீக்கள் வந்து குடியேறி உள்ளதாகவும், இதனால் தேனீக்கள் பெருகும் என்று கருதப்படுகிறது.
அதுபோல, பொதுமக்களிடம், தேனீக்கள் வளர்வதற்காக பலவித ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி அரசு வலி யுறுத்தி வருகிறது.
பொதுமக்களும் இயற்கையை நேசிக்கும் வகையில், தங்கள் வீடுகளில் மொட்டை மாடிப் பகுதியில் சிறிய சிறிய பூச்செடிகளை வளர்த்து வருகிறார்கள். அங்கே தேனீக்கள் வாழ்வதற்காக சிறிய வீடுகளையும் ஏற்படுத்தி வரு கிறார்கள். வீடுகளின் வெளியேயும் சிறிய பூங்காக்கள் போன்ற அமைப்புகளையும் உருவாக்கி வருகிறார்கள்.
‘தேனீக்கள் வளர்க்க இந்த நாடுகள் எடுத்து வரும் முயற்சிகள் உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன….