சென்னை:
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்.14-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே மார்ச் 30ந்தேதி வரை விடுமுறைஅறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதை ஏப்ரல் 14ந்தேதி வரை நீட்டிப்பதாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெவித்துள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் பேராசிரியர்கள், பணியயாளர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
[youtube-feed feed=1]