சென்னை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:-
சேலம், திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், சிவகங்கை, விருதுநகர், கரூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை:-
திருச்சி, தஞ்சாவூர், மாவட்டங்களில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.