இந்தியாவில் ஹோலி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வண்ணமயமான திருவிழாவான ஹோலி பண்டிகை டெல்லி முதல் கொல்கத்தா வரையிலான வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்தப் பண்டிகையை ஒட்டி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னையிலும் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சௌகார்பேட் பகுதியில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

ஆட்டம் பாட்டத்துடன் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி உற்சாக நடனமிட்டு ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.