சீனாவில் HMPV வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
HMPV எனப்படும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (human metapneumovirus -HMPV) நோய் கொரோனா வைரஸ் போன்று வேகமாகப் பரவக்கூடும் என்ற கவலை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேவேளையில், இவ்வகை வைரஸில் புதிய மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் வரை இதில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக HMPV வைரஸ் இருமல், காய்ச்சல், சளி அல்லது மூக்கில் அடைப்பு மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஒருசிலருக்கு இதனால் மூச்சு திணறல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
HMPV வைரஸ் பல ஆண்டுகளாக உள்ளபோதும் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் H1N1 போன்ற பிற வைரஸ்களாலேயே அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் அளவுக்குக் கூட சீனாவில் வைரஸ் பரவல் இல்லை என்றும் அங்கு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.