ஹிஸ்புல் தலைவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது அமெரிக்கா: இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்றவன்

வாஷிங்டன்: ஹிஸ்புல் அமைப்பின் தலைவர் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்- பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சில மணி நேரங்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளியானது.
காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து, அதற்கு பின்புலமாக இருந்து வந்த, பயங்கரவாத தலைவர் சையத் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

கடந்த 2016 செப்., மாதத்தில், காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரை நடத்துவோம் என்று சலாஹூதீன் மிரட்டல் விடுத்திருத்தது குறிப்பிடத்தக்கது.

 


English Summary
Hizbul chief Syed Salahuddin designated as global terrorist by US