டில்லி:
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 1000 டவர்களை மூட முடிவு செய்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் உருவாகியுள்ள கடும் போட்டி, ஊழியர்களுக்கான செலவு, 4ஜி சேவைகள் இல்லாமை போன்ற காரணங்களால் பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் போட்டி ரீதியாக வலுவிழந்துவிட்டன.
இந்த நிலையில், தமிழ்நாடு, தெலுங்கான, ஆந்திரபிரதேசம், உத்தரபிரதேசம் (கிழக்கு), மகாராஷ் டிரா மற்றும் கேரள பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 1000 டவர்களை மூட முடிவு செய்து உள்ளது. இதற்கான பணிகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தொலைதொடர்பு சேவை வழங்கும் பிஎஸ்என்எல்லுக்கு நாடு முழுவதும் சுமார் 1.1 லட்சம் கோபுரங்கள் உள்ளன. இதில் பல கோபுரங்களுக்கான வாடகை பாக்கி செலுத்த முடியாமல் பிஎஸ்என்எல் தத்தளித்து வருகிறது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் செயல்பட்டு உள்ள பிஎஸ்என்எல் டவருக்கு வாடகை பாக்கி ரூ.1.5 கோடி செலுத்தத் தவறியதால், தமிழகத்தின் வருவாய் துறை பிஎஸ்என்எல் கோபுரத்திற்கு சீல் வைத்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், “தேவையற்றவை” என்று கருதப்படும் சுமார் ஆயிரம் கோபுரங்களை முதல்கட்ட மாக மூட பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. அந்த கோபுரத்தின்கீழ் செயல்பட்ட வந்த தொலை தொடர்பு இயக்கங்களை அருகில் உள்ள மற்ற கோபுரங்களுக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சந்திக்கும் நெருக்கடி குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,
4ஜி ஒதுக்கீட்டின்போது அரசு பொதுத் துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படவில்லை. ஏனென்றால், அரசின் ஆதரவோடு பொதுத் துறை நிறுவனங்கள் போட்டியைச் சீர்குலைக்கும் எனக் கருதப் பட்டது. ஆனால், சந்தையின் சூழலையும், போட்டியையும் கருத்தில்கொண்டு 4ஜி சேவைகளில் தொடங்குவது குறித்து நாங்கள் பரிசீலிப்போம்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர் செலவைக் காட்டிலும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஊழியர் செலவு மிக அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்த வருமானத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர் செலவு 75.06 விழுக்காடாக வும், எம்டிஎன்எல் நிறுவனத்தின் ஊழியர் செலவு 87.15 விழுக்காடாகவும் உள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கோ ஊழியர் செலவு 2 முதல் 5 விழுக்காடாக மட்டுமே உள்ளது. நாங்கள் ஊழியர்கள் மீது கவனம் செலுத்தவும் விரும்புகிறோம். அதே நேரத்தில் பொதுத் துறை நிறுவனங்க ளுக்கும் புத்துயிர் கொடுக்க விரும்புகிறோம். பொதுத் துறை நிறுவனங்களை இயக்குவது மிகவும் அவசியம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டெழுந்து திறம்பட செயல்பட வேண்டுமென நாங்கள் விரும்பு கிறோம். பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்குப் புத்துயிர் கொடுப்பதற்காகவும், மறு கட்டமைப்பு செய்வதற்காகவும் திட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய மேலாண்மைக் கழகமும் (அகமதாபாத்), தனியார் ஆலோசனை நிறுவனமான டெலாய்ட்டும் இணைந்து பணிபுரிந்து வருகின்றன” என்று தெரிவித்து உள்ளார்.