மேதி

மேதியில் கடந்த 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்தது மீண்டும் நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் மக்களவை தேர்தல் கடந்த 1952 ஆம் வருடம் நடைபெற்றது. அப்போதிருந்து தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி புரிந்து வந்தது. காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதமராக நேரு பதவி ஏற்றார். அவர் மறைவுக்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். அவர் மிகக் குறுகிய காலத்தில் மரணம் அடைந்ததால் இந்திரா காந்தி பதவி ஏற்றார்.

கடந்த 1977 ஆம் வருட மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை இழந்தது. இந்தியாவின் இரும்புப் பெண்மணி என உலகப் புகழ் பெற்ற இந்திரா காந்தி அம்முறை அமேதி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். அவரை ஜனதா கட்சி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ராஜ் நாராயணன் தோற்கடித்தார். அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அமேதியின் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்த வருடம் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார். கடந்த 1977 ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தார். தற்போதைய தேர்தலில் ராகுல் காந்தியை பாஜகவின் ச்ம்ரிதி இரானி 55120 வாக்குகளில் வென்றுள்ளார். 1977 ஆம் வருடம் இந்தியா காந்தியை ஜனதாவின் ராஜ் நாராயணன் 55,202 வாக்குகளில் வென்றார்.