நெட்டிசன்:
#ஈசன்எழில்விழியன்….! முகநூல் பதிவு
சேலம் டவுன் தாதுபாய்குட்டை பகுதிக்கும் , குகை திருச்சி மெயின்ரோடுக்கும் இடையேயுள்ள பகுதிக்கு புலிக்குத்தி பகுதி என்று பெயர்..!
நகரங்கள் உருவாகாத பண்டையகாலங்களில்,காட்டிலிருந்து ஊருக்குள் மக்களை அச்சுறுத்தும் புலிகளை வீரத்துடன் எதிர்த்து நின்று போராடி,வேலால் புலியை குத்தி கொன்று மக்களை காப்பாற்றும் வீரர்கள் நினைவாக அந்த பகுதியில் புலியை குத்தும் வீரன் சிற்பம் வடிக்கப்பட்ட ஒரு பெரிய கல்லை மக்கள் நடுவது வழக்கம்..! அதற்கு புலிக்குத்திகல் அல்லது நடுகல் என்று பெயர்…!
அந்த வகையில் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முந்தைய ,நாயக்கர் காலத்தில் நடுப்பட்ட ஒரு புலிக்குத்திகல் ,சேலம் நியுசினிமா தியேட்டர் அருகே உள்ள ஜவுளிகடை பஸ் ஸ்டாப் போலீஸ் குடை பின்புறம் உள்ளதால் ,அந்த புலிகுத்தி கல்லை போற்றும் வகையில் ,நியுசினிமா தியேட்டரை ஒட்டிய சாலைக்கு புலிக்குத்தி மெயின் ரோடு என்றும் ,இடைஇடையே உள்ள 6 குறுக்குசாலைகளுக்கு புலிக்குத்தி தெருக்கள் 1,2,3,4,5,6 என்றும் வரிசைகிரம மாக பெயர் சூட்டப்பட்டுள்ளது..!
மேலும் இப்பகுதி சேலத்தின் முக்கிய பகுதியாகும்..!
இப்பகுதியில் நியுசினிமா சினிமா தியேட்டரை ஒட்டிய காலி மைதானத்தில் குறவன் குறத்திகள் கூடாரம் அமைத்து வசிப்பார்கள்..! மேலும் பலவகை மரப்பெட்டிகள் செய்யும் தொழிலும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது..!
புலிக்குத்தி பகுதியில் நிறைய பழைய டூவீலர்கள் வாங்கி விற்கும் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனங்கள் உள்ளன, மேலும் CTA ஓட்டல், ராஜீ நூல்கடை, ராவேந்திரா டெக்ஸ்டைல், பழைய நாகாமினி தியேட்டர், சங்கீத் தியேட்டர் சைக்கிள் ஸ்டேண்ட், புலிக்குத்தி 6ஆம் தெருவிலுள்ள கைலாஷ்பிரகாஷ் தியேட்டர் உரிமையாளர்கள் வீடு ஆகியவை முக்கியமான இடங்களாகும்…!
அந்த கால தமிழர்களின் வீரதீரத்தை போற்றும் புலிகுத்திகல்லின் பெயரால் ஒரு பகுதியே இன்றும் அழைக்கப்படு வது சேலத்தின் பெருமைகளில் ஒன்றாகும்..!
நன்றி..!
#ஈசன்எழில்விழியன்….!