தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார் .
தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் ஹிப்ஹாப் தமிழா, இப்படத்திற்கு ‘சிவகுமாரின் சபதம்’ என பெயரிட்டுள்ளர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒளிப்பதிவாளராக அர்ஜுன்ராஜா, எடிட்டராக தீபக், கலை இயக்குநராக வாசுதேவன் ஆகியோர் பணிபுரிந்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்களுக்கான உரிமத்தை ‘திங்க் மியூசிக்’, நிறுவனம் பெற்றுள்ளதாகவும் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.