பெங்களூரு: சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசுவதில் பெயர்பெற்ற பெங்களூரு தெற்கு தொகுதி மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, நாட்டின் அதிகாரம் இந்துக்களிடம் இருக்க வேண்டுமென்ற மற்றொரு முத்தை உதிர்த்துள்ளார்.
பெரும்பான்மை இந்துக்களின் நலனிற்கு எப்போதுமே எதிரானவர்கள் என்ற ஆதாரப்பூர்வ விமர்சனத்திற்கு உள்ளாகும் பாரதீய ஜனதா & சங்பரிவாரத்தினர், இப்படி பேசி பேசியே அரசியல் செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
தேஜ்ஸ்வி சூர்யா கூறியுள்ளதாவது, “இந்திய அதிகாரம் இந்துக்களிடம் இருக்க வேண்டும். நாம் அதிகாரத்தில் இல்லாதபோது ராமர் கோயிலை இழந்தோம். தற்போது, அதிகாரம் நம் கையில் இருப்பதால் நமக்கான கோயில் மீண்டும் கிடைக்கிறது. தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், அதிகாரம் இந்துக்களிடம் இருக்க வேண்டும்.
அரசியல் சாசனப்படி, மதசார்பற்ற இந்த நாட்டில், உச்சநீதிமன்றமானது, இந்துக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று சொல்ல வருகிறாரா தேஜ்ஸ்வி? என்று கேள்வியெழுப்புகிறார்கள் விமர்சகர்கள்.