சினிமாவில் நடிகர் களின் மகன்கள் பெரும்பாலும் நடிகர்களாவே ஆவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் காமெடி வேடங்களில் நடித்திருப் பவர் சின்னி ஜெயந்த். இவரது மகன் ஐ ஏ ஏஸ் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் சிறுவயது முதல் ஆர்வமாக படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.


சென்ற 2019ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடந்தது. செப்டம்பர் மாதம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்பட 829 இடங்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது.
இதில் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடை பெற்றது. இதன் முடிவுகளை யு.பி.எஸ்.சி வெளி யானது. அதில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களில் நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருஜன் ஜெய் ஒருவரும் ஆவார்.
இவர் இந்திய அளவில் ஐ.ஏ.எஸ். தேர்வில் 75-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் ஒரு சிலர் பலமுறை தேர்வு எழுதி பாஸ் ஆவார்கள் ஸ்ருஜன் ஜெய் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றிருக் கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.