லக்னோ:
உ.பி.மாநில பாரதியஜனதா எம்எல்ஏ ஒருவர், இந்துக்களே அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார். நாடு முழுவதும் மக்கள் தொகையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவரும் வேளையில், பாஜ எம்எல்ஏவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கடாலி தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் விக்ரம் சைனி. இவர் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திருமண தம்பதிகளிடம் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்… நாட்டில் இந்துக்களின் அதிக அளவில் பெருகும் வகையில் இந்துக்கள் அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்.
மேலும், அரசு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட நிலையில், இந்துக்கள் மட்டுமே இரண்டு குழந்தை கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்கள், மற்ற மதத்தினர் எவரும் அரசு கொள்கையை பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
எனவே இந்துக்களும் அதிக பிள்ளைகளை பெற வேண்டும் என்றும், இதை நான் எனது மனைவியிடமும் கூறி உள்ளேன் என்றும் அவர் பேசினார்.
சைனியின் பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.