டெல்லி: இந்து மதம் ஒரு வாழ்க்கைத் தத்துவம்; அது மதவெறியை அனுமதிப்பதில்லை, “சகோதரத்துவம்தான் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் பொன் எழுத்துகளால் பதிக்கப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை” என்றும் நீதிபதிகள் நீதிபதி கே.எம்.ஜோசப், நாகரத்னா அமர்வு தள்ளுபடி செய்தது.
பாஜக பிரமுகரும் மூத்த வழக்கறிஞருமான வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டு படையெடுப்பின்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், இந்தியாவில் நடந்த வெளிநாட்டு படையெடுப்புகளால் பெயர் மாற்றப்பட்ட நகரங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவற்றின் பெயர்களைத் திருத்தி அமைக்க வேண்டும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமின்றி இந்தியா விலேயே ஏழு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாக ஆகிவிட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கே.எம்.ஜோசப், பி. வி. நாகரத்னா ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உபாத்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதி கே. எம். ஜோசப்: தனது உத்தரவில் “நம் நாடு மதச்சார்பற்றது என்ற முறையில் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் கடந்த காலத்தைப்பற்றி கவலை கொள்கிறீர்கள். சென்றுபோன தலைமுறையினர் மூடிய இடத்தை தோண்டுகிறீர்கள். நீங்கள் இவ்வாறு செய்வது ஒற்றுமையின்மை உண்டாக்கும். உங்கள் விரல் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சுட்டிக்காட்டி அதை கொடூரமானது என்று சொல்கிறது. இந்த நாடு எப்போதும் கொந்ததளிப்புடனேயே இருக்கவேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வாழ்வியல் தத்துவத்தை அடிப்பையாகக் கொண்ட மிகச்சிறந்த மதம் இந்து மதம். அதனைச் சிறுமைபடுத்தாதீர்கள். எப்போதும் நம்மை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்து மதத்தை சமமாகவே நேசிக்கிறேன். இந்து மதத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். இந்து மதத்தின் சிறப்பைப் புரிந்துகொள்ள முயலுங்கள். இந்துமதத்தை உங்களுடைய குறிப்பிட்ட நோக்கத்துக்கு தகுந்தபடி பயன்படுத்தாதீர்கள். நான் கேரளாவைச் சேர்ந்தவன். அங்கு கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்கு இந்துக்களே நிலத்தை கொடையாக அளித்துள்ளனர்.” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளது.
நீபதி நாகரத்னா: தனது உத்தரவில் “இந்து மதம் என்பது ஒரு வாழ்வியல் முறையைக் குறிக்கிறது. அது மதவெறியை அனுமதிப்பதில்லை. நாட்டில் தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. காலனி ஆதிக்க காலத்தில் ஆங்கிலேயர்கள் கையாண்ட பிரித்தாளும் கொள்கையை இங்கு கொண்டுவர வேண்டாம்”.
“ஒரு நாடு கடந்த காலத்தின் கைதியாக இருக்க முடியாது. இந்தியாவில் நடைபெறும் சட்டத்தின் ஆட்சி, மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புடன் இணைந்தது. 14வது சட்டப்பிரிவு மாநில நடவடிக்கைகளில் சமத்துவம் மற்றும் நேர்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. எந்த நாட்டின் வரலாறும் அதன் தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினரை வேட்டையாட முடியாது.” என்று கூறிய நீதிபதிகள், சகோதரத்துவம் மட்டுமே ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினர்.
“சகோதரத்துவம்தான் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் பொன் எழுத்துகளால் பதிக்கப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை” என்றும் நீதிபதிகள் கூறினர்.
நீதிபதி ஜோசப் தலைமையிலான அமர்வு, ஏப்ரல் 2016ம் ஆண்டு மத்தியபாஜக அரசு, உத்தரகாண்டில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்தது பதவி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹரிஷ் ராவத் அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியை நடத்தியது.
இதன் காரணமாக, உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேஎம்ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பியது மத்திய அரசு. தனது பரிந்துரையை மீண்டும் கொலீஜியம் வலியுறுத்தினால் அது மத்திய அரசை உறுதியாகக் கட்டுப்படுத்தும் என்ற நிலையில், புதன்கிழமை கூடிய கொலீஜியம் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதைத் தள்ளிப் போனது மீண்டும் கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், வேறு வழியின்றி அவரது பதவி நியமனத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.