லக்னோ:

உ.பி.மாநிலம் அலிகாரில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட கூடாது என்று இ ந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் இந்து யுவ வாகினி அமைப்போடு இணைந்தது செயல்பட்டு வருகிறது. இந்து மாணவ மாணிவிகள் அதிகம் பயிலும் கிறிஸ்தவ பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினால் அது மதமாற்றத்துக்கு வழி வகுக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

‘‘பள்ளி மாணவ மாணவிகளை பொம்மை, பரிசு பொருட்கள் கொண்டு வருமாறு பள்ளி நிர்வாகங்கள் கேட் டுக் கொண்டுள்ளது. இது போன்ற செயல்பாடும் இந்து மாணவ மாணவிகளை மனதளவில் பாதிப்படைய செய்யும்’’ என்று இந்து ஜாக்ரன் மஞ்ச் நகர தெலைவர் சோனு சவிட்டா தெரிவித்துள்ளார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு காவல்நிலைய வாசலில் ஒரு பாதிரியாரின் காரை மறித்து, பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈ டுபட்டனர். அந்த பாதிரியார் கிறிஸ்தவ மத மாற்ற பாடல்களை குழுவினர் மூலம் பாடி வந்ததாக பஜ்ரங் க்தள் குற்றம்சாட்டியது. இதை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து தற்போது உ.பி. கிறிஸ்தவ பள்ளிகளுக்கு இ ந்துத்வா அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

2002ம் ஆண்டு யோகி ஆதித்யாநாத் மூலம் இந்து யுவ வாகினி அமைப்பு தொடங்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு பாதிரியார் ஒருவர் இந்துக்களை மதமாற்றும் செயலில் ஈடுபடுவதாக கூறி அவர் மீது இந்த அமைப்பு சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதேபோல் மேற்கு உ.பி.யில் உள்ள மகாராஜ்கஞ் மாவட்டத்தில் ஒரு தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் 10 அமெரிக்கர்கள் உள்பட 150 பேர் கலந்துகொண்டனர். இங்கு மதமாற்றம் நடப்பதாக இந்து யுவ வாகினி அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தலையிட்டு அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

அங்கு இது போன்ற நிகழ்ச்சி நடப்பது வாடிக்கை. எனினும் இந்த முறை அமெரிக்கர்கள் கலந்து கொண்டதால் மதமாற்றம் நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த அமைப்பு புகாரில் தெரிவித்திருந்தது.

2014ம் ஆண்டு தேவாலயங்களுக்கு வெளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடக் கூடாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.