அஜீத் நடிக்கும் வலிமை’ பட தயாரிப் பாளர் போனி கபூர் வீட்டில் சிலருக்கு சென்ற மாதம் கொரோனா தொற்று பரவியது. உடனடியாக மருத்துவமனை யில் அவர்களை தன்மைப்படுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்த பின்னர் குணம் அடைந்தனர். தற்போது பாலி வுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்குள் புகுந்திருக்கிறது கொரோனா வைரஸ். அவர் வீட்டில் பணியாற்றும் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டது. அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது தொற்று உறுதியானது. உடனடியாக மருத்துவ ஊழியர்கள் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஆமீர்கான் அவரது மனைவிக்குபரிசோதனை செய்யப் பட்டது. அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என முடிவு வந்தது. தற்போது அவரது தாயாருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படு கிறது. அவருக்கு தொற்று எதுவும் இருக்கக்கூடாது என்று பிரர்த்திக் கொள்ளும்படி தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார் ஆமீர்கான்.
Patrikai.com official YouTube Channel