சிம்லா:
இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 22-ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
தொற்று அச்சுறுத்தல் காரணமாக முதல்வர் தாக்கூரின் மனைவியும் வீட்டு தனிமைப் படுத்து தலில் உள்ளனர். முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தாரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் அலுவலக வளாகம் மற்றும் வீடு ஆகியவை சுத்திகரிக்கப்பட்டன. மேலும் தொற்று பாதிக்கப் பட்ட துணை செயலாளருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் மற்றும் அதிகாரிகளின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தில், தனிநபர் பாதுகாப்பு மற்றும் வீட்டு ஊழியர்களில் உள்ள 36 பேரின் மாதிரிகள் இதுவரை சேகரிக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.