டெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்கள் சட்டமன்ற ஆயுட்காலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டுள்ளார்.
68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள சட்டசபையின் ஆயுட்காலம் முடிவடையதையொட்டி, புதிய சட்டசபையை அமைப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. நவம்பர் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அக்டோபர் 17ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது.
வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 25ந்தேதி.
அக்டோபர் 27ந்தேதி வேட்புமனு பரிசீலனை.
வேட்புமனு வாபஸ் பெற அக்டோபர் 29ந்தேதி கடைசி நாள்
வாக்குப்பதிவு நவம்பர் 12ந்தேதி நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ந்தேதி.
டிசம்பர் 10ந்தேதியுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருகிறது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் எந்தவிதமான இலவசங்களை யும் விநியோகிக்கக்கூடாது என்றவர், அதை நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்றும், தேர்தல் நடைபெறும் மாநிலம் மற்றும் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் மின்வழி மற்றும் சரக்குக போக்குவரத்து மற்றம், திட்டமிடப்படாத எந்த விமானமும் தடைபடாமல் இருக்க விமான நிலையங்கள் கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் குமார் கூறினார்.