போலந்து:
போலந்து நாட்டில் நடைபெற்று வரும் தடகள போட்டியில் ஹிமா தாஸ் 2வது முறையாகவும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 5ந்தேதி நடைபெற்ற போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹீமா தாஸ் தங்கப்பதக்கம் வென்றார். இந்த நிலையில், தற்போது பெண்கள் 200 மீட்டர் ஓட்டத்தில் தனது இரண்டாவது சர்வதேச தங்கத்தை வென்றார்.
போலந்து நாட்டில் போஸ்னன் அத்லெடிக்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய தடகள வீராங்கனை பங்குபெற்றுள்ளார். இவர் ஏற்கனவே 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனைப் படைத்துள்ள நிலையில், முகுது வலி காரணமாக கடந்த சில மாதங்களாக போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் போலந்தில் நடைபெற்ற போட் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவர், தூரத்தை 23.65 வினாடிகளில் கடந்தார்.
நேற்று நடைபெற்ற குட்னோ தடகளக் ஓட்டத்தில் பங்குகொண்ட ஹிமா தாஸ் பெண்கள் 200 மீட்டர் ஓட்டத்தில் தனது இரண்டாவது சர்வதேச தங்கத்தை வென்றார். இவர் இந்த சாதனையை 23.97 வினாடிகள் ஓடி சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் கலந்துகொண்ட வி.கே.சிஸ்மயா 24.06 வினாடிகளில் ஓடி, வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.