திருவண்ணாமலை :

திருவண்ணாமலையில் மகாதீப திருநாள் அன்று மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘பெஞ்சல்’ புயலால் கடந்த 1 மற்றும் 2ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில், கனமழை பெய்ததில், திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது, மூன்று இடங்களில் சிறு அளவிலான மண் சரிவும், மூன்று இடங்களில் பெரிய அளவிலான மண் சரிவும் ஏற்பட்டது., மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், ஐந்து இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதில், பெரிய அளவில் பாதிப்பில்லை எனினும் வ.உ.சி., நகரில், ஏழு பேர் பலியாகினர்.

திருவண்ணாமலை மலையில் மண்ணின் தரம் குறித்து, ஓய்வுபெற்ற ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் குழு ஆய்வு நடத்தியபோது, மேலும் மழை பெய்தால், மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏர்கனவே பெய்த மழையால் மலையில் ஆங்காங்கே நீர் தேங்கியும், மண் இளகிய தன்மையுடனும் உள்ளது. பாறைகளில் பாசி பிடித்துள்ளது. இதனால், லேசான மழை பெய்தாலே, மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மஹா தீபத்தை காண, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் எவ்வித கட்டுப்பாடும் இன்றி ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டனர். பிறகு  க்தர்கள் பாதுகாப்பு கருதி கடந்த ஐந்தாண்டுகளாக 2,500 பேர் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதித்து வந்தது.

இந்த மாதம்  13 ஆம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.  மண் சரிவு எச்சரிக்கையால் மகாதீபத்தன்று பக்தர்கள் மலை ஏறத் தடை விதிக்கபட்டுள்ளது