சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில், பல்வேறு அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை சென்னை உயர்நீதிமன்றமே பலரது வழக்குகளை தானானகவே முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இது பரபரப்பையும், திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடைவிதித்து மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை எனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணை நடந்தது. இந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்குமாறு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரப்பட்டது. அதாவது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றமில்லை என 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை. எனவே அவர்கள் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம், ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 18ந்தேதி, ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பில், டெண்டர் முறைகேடு தொடர்பான இந்த வழக்கில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 2018ஆம் ஆண்டுவிசாரணை செய்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதன் மீது மேல் முறையீடு தேவையில்லையென்றும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மட்டுமே மாறியுள்ளது. அரசியல் காரணங்களுக்காக அரசியல் சூழ்நிலையும் மாறப்பட்டுள்ளது. அதனால் இதன் மீது மேல் நடவடிக்கைக்கு முகாந்திரம் இல்லையென கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
தற்போது திமுக அமைச்சர்கள்மீதான வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் அடுத்தடுத்து ரத்து செய்து வந்த நிலையில், அந்த வழக்குகளை மீண்டும் தாமாகவே முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் விசாரணைக்கு எடுத்துள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான ஊழல் வழக்கு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!