சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த இரண்டு ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டு விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறிய பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது,
புத்தாண்டில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று (ஜன.,06) காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, கவர்னர் ரவி கூட்டத்தொடரை புறக்கணித்தார். இதைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்தார்.
ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள்:
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன
2024-ல் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4113 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது .
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 60 சதவீதம்.
பால் கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
மீனவர்கள் உரிமையை பாதுகாக்க அரசு முழு முனைப்பு கொண்டுள்ளது.
இலங்கையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து வலியுறுத்தல்.
தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.
அடுத்த ஆண்டுக்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு தீர்வு காண ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.
ரூ.10 லட்சம் கோடிக்கு மேலான தனியார் முதலீடுகள் இதுவரை ஈர்க்கப்பட்டுள்ளன. பெரம்பலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மின் வாகனங்களின் மையமாக கோவை, ஓசூர் மாறியுள்ளது. முதலீடுகள் மூலம் சமமான பரவலான வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதலீடுகள் மூலம் சமமான பரவலான வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது.
மாவட்டங்களில், சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சை, தருமபுரி, தேனி மாவட்டங்களில் புதிதாக சிப்காட் அமைக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.
தொழிற்சாலை பணியாளர்களுக்காக வீட்டு வசதி திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் நிறுவியுள்ளார். அதிக அளிவில் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவருகிறது
கிராமப்புற சாலை வசதி திட்டத்தின் மூலம் ரூ.4,000 கோடியில் 9,653 கி.மீ. சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.
அதிக அளிவில் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவருகிறது
2024-ல் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4113 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் பின்தங்கியுள்ள மக்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், மருத்துவம், கல்வி வங்கி மற்றும் நீதி சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெறுவதில் சாலை இணைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை மேம்படுத்த முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4000 கோடி மதிப்பீட்டில் 9,653 கி.மீ. சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்துள்ளன.
தமிழ்நாட்டின் வேளாண் விளைநிலங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு என தனி வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, உள்ளிட்ட பல முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளில் மேலும் 10,000 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் திட்டம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறிய பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது, அலுவல் ஆய்வுக்குழு இன்று மாலை கூடி, எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கும்.