மும்பை:
பிஎல் 2022 தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியஈல் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. இந்த அணியில் ஜாஸ் பட்லர் 116 ரன்கள் அடித்தார். இதில் 9 பவுண்டரி, 9 சிக்சர்களும் அடங்கும். இந்த அணியின் ஸ்கோரான 222 ரன்கள் நடப்பு சீசனில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது. ராஜஸ்தான் இன்னிங்சின் முதல் 30 பந்தில் 29 ரன்னும், அடுத்த 90 பந்தில் 193 ரன்னும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

20 ஓவரில் 223 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் கொல்கத்தா – குஜராத் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பெங்களுரூ – ஹைதராபாத் அணிகளும் மோத உள்ளன.