புதுடெல்லி:
மக்களவைக்கான 5-ம் கட்ட தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 74.15% வாக்குகள் பதிவாயின.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி, சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி உட்பட 7 மாநிலங்களில் 51 மக்களவை தொகுதிகளில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்.
5-ம் கட்டத் தேர்தலில் 674 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேற்கு வங்க மாநிலத்தில் முந்தைய வாக்குப்பதிவின் போது வன்முறை நடந்ததால், இன்று தேர்தல் நடந்த 7 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாலை 6 மணி வரை பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:
மேற்கு வங்கம்: 74.15%
மத்தியப் பிரதேசம்: 63.40%
ராஜஸ்தான்: 63.22%
உத்தரப் பிரதேசம் : 54.31%
ஜார்கண்ட் : 64.23%
பீகார் : 57.76%
ஜம்மு-காஷ்மீர் : 17.07%