புதுடெல்லி:

துவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வெகுவாக அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவிலும் தனது கோரமுகத்தை காட்டி வரும் கொரோனா, நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியாவில் கடந்த 58 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.

இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வெகுவாக அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரு நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,25,101- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 69597-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கை 3720- ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 41,642- பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனாவுக்கு 1,454- பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11,726- ஆக உள்ளது.