தெனிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த (ஜூன் 23, 2019) அன்று சென்னை மையிலாப்பூரில் உள்ள புனித எபாஸ் மேல்நிலை பள்ளியில் பல பிர்ச்சனைககளுக்கு நடுவே நடந்து முடிந்தது.
தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் மீது நடந்த வழக்கில் இன்று ஓட்டு எண்ணிக்கை எப்போது நடைபெறும் என்று இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தனர் .
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்ற நடிகர் விஷாலின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.விசாரணை நிலுவையில் உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.