சென்னை:
மிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்துக்கு நடுவரை நியமிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகள், ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்துக்கு நடுவரை நியமிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், லோக்பால், லோக்ஆயுக்தா போல,  உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர் முதல் பஞ்சாயத்துத் தலைவர், உறுப்பினர்கள் வரையிலான நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 2014-ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்த சோ. அய்யர் ஓய்வு பெற்ற நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படாமல் உள்ளது.  இதனால்,  ஏராளமான முறைகேடு புகார்கள் நிலுவையில் உள்ளதாலும் நடுவரை நியமிக்கும்படி ஆளுநரின் செயலருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட கோரப்பட்டிருந்தது.
மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், அதிகாரிகளும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும்  குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அதையடுத்து,  மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
[youtube-feed feed=1]