சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான பொது தலைநகரமாக சண்டிகர் விளங்குகிறது என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு இருமாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது பஞ்சாப் மற்றும் ஹரியானா உச்சநீதிமன்றம்.
ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
சண்டிகரில் வசிக்கும் பூல் சிங் என்னும் வழக்கறிஞர், தான் பட்டியலின வகுப்பை சேர்ந்தவராக இருந்தபோதிலும், சண்டிகரில் வாழ்வதால், தன்னை பாது ஒதுக்கீட்டின் வகைப்பாட்டிலேயே கணக்கிடுகிறார்கள்.
இதனால், உயர்மட்ட நீதித்துறை சேவைகளில் தன்னால் பணி வாய்ப்புகளைப் பெற முடிவதில்லை என்று மனுதாக்கல் செய்திருந்தார்.
இரு மாநிலங்களுமே ஒரு நிலைப்பாட்டை எடுப்பதால், தான் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சண்டிகர் நகரம் இரு மாநிலங்களுக்குமான பொதுவான நகரம் என்பதை உறுதிசெய்யும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அட்வகேட் ஜெனரல்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த நகருக்கு தொடர்ந்த பல்லாண்டுகளாக, இரு மாநிலங்களுமே உரிமை கொண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.