madras-hc-full
சென்னை,
சென்னையை அடுத்த வேளச்சேரி பள்ளிகரணை சதுப்பு நிலப் பகுதியை பட்டா போட தடை சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்த்துபிள்ளது.
 
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில், 425 ஏக்கர் நிலத்தை, வனத்துறைக்கு மாற்றம் செய்து, உள்ளாட்சி நிர்வாக துறை, 2012 டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளிக்கரணை, காயிதேமில்லத் நகரில் வசிக்கும், 62 பேர் வழக்கு தொடர்ந்தனர். தவிர சதுப்புநிலங்களை, சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, பட்டா வழங்கக் கோரி, சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
marshland-pallikaranai
பள்ளிக்கரணையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான சதுப்பு நிலங்கள் அபகரிக்கப் பட்டது குறித்து ஏற்கனவே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், வருவாய் துறை மற்றும் பதிவுத்துறை ஒத்துழைப்பு இல்லாததால் விசாரணை முடங்கிப்போய் உள்ளது. சுமார்  66 ஏக்கர் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்டது குறித்த வழக்கு உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலங்கள் மட்டுமல்லாது, கூடுதலான நிலங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
வழக்கு விசாரணையின்போது, அரசுக்கு  நீதிபதி கிருபாகரன் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இந்த வழக்கு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு:-
palli-karana1
பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை பட்டா போட்டு வழங்க தடை விதிக்கப்படுகிறது.
1990க்கு பிறகு பட்டா வழங்கப்பட்டு இருந்தால், அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். 
இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் உட்பட 20 பேர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
அவர்கள் வரும் 28 ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
வேளச்சேரி ரயில் நிலையம், பல்லாவரம் சுற்றுவட்ட சாலை ஆகியவை சதுப்பு நிலப் பகுதிகள் தான்.
சதுப்பு நில பகுதிகளில் கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Rains in Chennai
வேளச்சேரி, பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம், தாம்பரம் மணிமங்கலம் போன்ற பகுதிகள் கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள்.
கடந்த  நவம்பர் மாதம் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு அனைவருக்கும் நினைவிருக்கலாம். 11 மாதங்கள் கடந்துள்ள நிலையில், ஏற்கனவே எத்தகைய தவறுகள் நடந்ததோ, அதுபோலவே தற்போதும் தொடர்ந்து நடைபெறுகிறது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
மீண்டும் கடந்த ஆண்டுபோல் வெள்ளப்பெருக்கு ஏற்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. இந்நிலையில், இந்த பகுதிகளில் இருந்த சதுப்புநிலம் முழுவதுமாக ரியல் எஸ்டேட் நிலமாக மாற்றப்பட்டு ஐ.டி நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதே முக்கிய காரணமாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.