திருப்பூர்:

விவசாய விளைநிலங்களின் வழியாக  மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதற்க  எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்தில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும் தமிழக அரசின் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகமும் இணைந்து பல்வேறு உயர்மின் அழுத்த மின்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான திட்டங்கள் நடைபெற்ற வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உட்பட 15 மாவட்டங்களில் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த பகுதிகளில் உள்ள  விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர்.

இதன் காரணமாக  விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சியினர் மற்றும்  பல்வேறு விவசாய அமைப்புகள்ஒ ன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.