திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பு உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், தங்கள் உடமைகளில் இரண்டு அரிய வகை உடும்புகளை மறைத்து வைத்து கடத்தி வந்த நபர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து உடும்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் சமீபகாலமாக கடத்தல் பொருட்கள் வருவது அதிகரித்து வருகிறது. பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள், அங்கிருந்து போதை பொருட்களை கடத்தி வருகின்றனர். ஏற்கனவே போதைப் பொருட்கள் மற்றும் அரிய வகை உயிரினங்கள், பாம்புகள், நட்சத்திர ஆமைகள், பல்லிகள் என்று பல்வேறு வகையான அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பேட்டிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பயணிகள் இருவர் தங்கள் உடமைகளில் இரண்டு அரிய வகை உடும்புகளை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது
. இதனையடுத்து, அவர்களிடம் இருந்து உடும்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த உடும்புகள் நகர்ந்து செல்லாமல் இருக்கணும்னு வாய், கால்கள் ஆகியவற்றை கட்டி வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மற்றொரு பயணியிடம் சோதனை செய்தபோது, அவரிடம் ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா போதை பொருள் 9.82 கிலோ இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கஞ்சாவின் மதிப்பு ஏறத்தாழ ரூ.10 கோடி இருக்கும் என கூறிய சுங்கத்துறை அதிகாரிகள், இதை கொடுத்து விட்டது யார், எங்கிருந்துகிடைத்தது என விமான பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.