சென்னை; காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு உள்துறை செயலர் தீரஜ்குமார் நேரில் இன்று ஆஜரான உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்றைய விசாரணைக்கு ஆஜராகாக தீர்ஜ்குமாருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக அரசின் உள்துறை செயலாளர் இன்று மாலை 4.30 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் இல்லையேல் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் எனவும் உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையினரின் மெத்தனப்போக்கு காரணமாக புலன் விசாரணை முடிந்த பிறகும் பல வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்து வருகிறது. இது நீதிபதிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர், அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதிலும், எதிர்த்து பேசுபவர்களை கைதுசெய்வதிலும், அவர்கள்மீது வழக்கு போடுவதையுமே முழு வேளையாக செய்து வருவதால் மற்ற குற்ற வழக்குகளில் தீவிரம் காட்டாத போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 30ந்தேதி) அன்று நடைபெற்ற 2015ம் ஆண்டின் வழக்கு விசாரணை ஒன்றில் புலன் விசாரணை முடிவடைந்தும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை, உடனே தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த நீதிபதி வேல்முருகன், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை காவல்துறை செயல்படுத்துவதில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதுபோன்ற நடைமுறை அதிக அளவில் காணப்படும் என்றதுடன், இதுகுறித்து உள்துறை செயலருக்கு தெரியுமா தெரியாதா என கேள்வி எழுப்பியது, இதுதொடர்பாக இன்று உள்துறை செயலாளர் நேரில் ஆ4ராக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர், உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக விலக்கு கோரி நீதிபதி முன்னிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, ஆஜராவதில் இருந்து உள்துறை செயலாளருக்கு விலக்கு அளிக்க முடியாது எனவும் இன்று மாலை 4.30 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும் ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஜராவதில் இருந்து தடை உத்தரவை உச்சநீதிமன்றத்தில் பெற வேண்டும் எனவும் அப்போது வாரண்டை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த காரணத்தை நீதிமன்றத்தில் சொல்லலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.