சென்னை: பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சுப்பையாவை பணியிடம் நீக்கம் செய்து தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையையும் விமர்சித்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் புற்றுநோய் துறை பேராசிரியராக இருந்து வருபவர் டாக்டர் சுப்பையா. இவர் ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான ஏபிவிபி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். இவர் சமீப்ததில், முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு போராடியதாக கைது செய்யப்பட்ட ஏபிவிபி தொண்டர்களை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து பேசினார்.
இதனால், அவரை பணியிடம் நீக்கம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசின் பணியிடை நீக்க உத்தரவில், டாக்டர் சுப்பையா அரசியல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், டாக்டர் சுப்பையா மீதான தமிழக அரசின் இடைநீக்கம் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு (2020) முன்பு பக்கத்துவீட்டாருடன் ஏற்பட்ட மோதலின்போது, அவரது வீடு முன்பு டாக்டர் சுப்பையா சிறுநீர் கழித்த விவகாரத்தில், தமிழக காவல்துறை அவரை மார்ச் 20ந்தேதி திடீரென கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தின்போது, நள்ளிரவு நீதிபதி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, காவல்துறையினர், பாதிக்கப்பட்ட மூதாட்டியையும் நள்ளிரவில் அழைத்து வந்திருந்தனர். அப்போது, அந்த பெண்மணி, தன் வீட்டில் சுப்பையா சிறுநீர் கழித்தது உண்மைதான்.. ஆனால் இப்போது அவர் பிரச்சனை செய்வது இல்லை என்று கூறினார். அதனால், காவல்துறையினரின் இந்த நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், சுப்பையா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அப்போதும், காவல்துறையினரின் நடவடிக்கை விமர்சிக்கப்பட்டது. தற்போத இந்த வழக்கிலும் தமிழ்நாடு காவல்துறையினரின் நடவடிக்கையை நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.