மதுரை: தமிழகஅரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்வி தொலைக்காட்சி தொடர்பாக டெண்டர் விட  உயர்நீதிமன்ற மதுரைகிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் அரசு பள்ளி மாணாக்கர்கள் பயன்பெற கடந்த அதிமுக அரசு கல்வித்தொலைக்காட்சியை தொடங்கி நடத்தி வந்தது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படங்கள் பாடங்கள் மாணவர்களுக்கு பெரிதும் உபயோகப்பட்டு வந்தது.  அரசால் நடத்தப்பட்டு வரும் டிவி சேனல் கல்வி தொலைக்காட்சி. இதில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  கல்வி தொலைக்காட்சிகாக தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்குவதற்கு திமுக அரசு டெண்டர் விடப்பட இருந்தது. இதற்கு தடைகேட்டு, மணிகண்ட பூபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவரது மனுவில்,  கல்வி தொலைக்காட்சியில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி என்ற ஒருவர் இல்லை. தலைமை தொழில்நுட்ப அதிகாரி இல்லாமல், பொருட்கள் வாங்கினால், அரசுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும். முறையாக தொழில்நுட்ப அதிகாரியை நியமித்து, கல்வி தொலைக்காட்சிக்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என தீர்மானித்து அதன் பிறகு டெண்டர் கோரப்பட வேண்டும் என அந்த வழக்கில் குறிப்பிட பட்டு இருந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  வழக்கின் தன்மையினை ஆராய்ந்து, கல்வி தொலைக்காட்சியில் உரிய தலைமை தொழில்நுட்ப அதிகாரி நியமிக்கபட்ட பின்னரே அவரின் வழிகாட்டுதலின் பேரில் என்னென்ன பொருட்கள் வேண்டும் என உறுதி செய்து பின்னர் டெண்டர் கோரப்பட வேண்டும், அதுவரை டெண்டர் விடக்கூடாது என தடை போட்டதுடன், மனு குறித்து, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.