மதுரை: குற்றவியல் வழக்கு விசாரணைகளின் தரம் குறைந்து வருவதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவதாகவும் கவலை தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி கூறியதாவது, “எந்த வழக்கின் விசாரணையாக இருந்தாலும் விசாரணை ஒரு தலைபட்சமாக நடக்கக்கூடாது. விசாரணை நியாயமாகவும், பாரபட்சமின்றியும் நடைபெற வேண்டும். நியாயமான விசாரணை அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிமையாகும். உண்மையை வெளிக்கொண்டு வருவதே விசாரணையின் நோக்கமாகும்.
தமிழக காவல்துறைக்கென்று உலகளவில் சிறப்பான பெயர் உள்ளது. அதற்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தில் குற்றவியல் வழக்குகளில் விசாரணையின் தரம் குறைந்து வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது.
இச்செயல் தொடர்ந்தால், பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்” என்ற அவர், குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள், போதிய நிபுணத்துவம் பெற்றுள்ளனரா?” என்றும் கேள்வி எழுப்பினார்.