ஜெய்பீம்’ திரைப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘நந்தா’. இந்தப் படம் 2001-ம் ஆண்டு வெளியானது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா – சூர்யா கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. பாலா இயக்கத்தில் உருவான ‘பிதாமகன்’ படத்தில் சூர்யா – விக்ரம் இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், 7 ஆம் அறிவு, மாற்றான் என தொடர்ந்து 7 முறை இரட்டை மற்றும் அதற்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்த சூர்யா மீண்டும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஹேம மாலினி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், தமிழில் கடைசியாக ‘ஹே ராம்’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.