புதுடெல்லி:
ந்திய எல்லைக்குள்  நுழைந்த சீன ராணுவ ஹெலிகாப்டர் பற்றி சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு
மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு

இந்திய- சீனா எல்லைப்பகுதியான உத்தரகான்ட் மாநிலத்தின் சமோலி மாவட்ட பகுதிகளில்  சீன ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி பறந்தது. சுமார் 5 நிமிடம் சுற்றிவிட்டு மீண்டும் சீன எல்லைக்குள் திரும்பி விட்டது.
இதுபோல சீன ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நமது பகுதிக்குள் அத்துமீறி பிரவேசிப்பது தொடர்கதையாகி வருகிறது.
இதுகுறித்து பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர், கிரண் ரிஜ்ஜு  சீனாவிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்படும் என கூறினார்.
இரு நாட்டு எல்லை குறித்து சீனா குழப்பத்தில் இருப்பதால், அடிக்கடி அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைந்து வருவதாகவும்,  எல்லைகளை வரையறுப்பதில் சீனா ஆர்வமின்றி இருப்பதாகவும் முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் விளக்கம் அளித்துள்ளார்.
சீன ராணுவம் அடிக்கடி நமது எல்லைக்குள் அத்துமீறி புகுந்து நோட்டமிடுவது குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் உசாராக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.