மதுரை :
தமிழகத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இன்று மதுரை வந்த அமைச்சர் செல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அனைவரும் விரும்புவதாகவும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.