கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் ஹெலிகாப்டர் உல்லாசப் பயனத்தை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூரில் துடியலூர் அருகில் உள்ளது வட்டமலைப் பாளையம்.  இங்கு அமைந்துள்ள கங்கா செவிலியர் பயிற்சிப் பள்ளியில் அரசு சார்பில் நேற்று ஒரு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துக் கொண்டார்.  அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார், ஆறுக்குட்டி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலாவை அமைச்சர் தொடங்கி வைத்தார்.   பொள்ளாச்சி ஹெஸ்பிலை ஏவியேஷன் நிறுவனம் நடத்தும் இந்த சுற்றுலா குறித்து, “கோவையில் ஹெலி கார்னிவல் நிகழ்ச்சியாக இந்த ஹெலிகாப்டர் உல்லாசப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.   இந்த பயணத்தில் 5 வயதுக்க்கு மேற்பட்ட குழந்தைகள்,  மாணவ மாணவியர், பெற்றோர் உள்ளிட்டோர் கோவையை சுற்றி வரலாம்.

இந்த மாதம் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி  வரை நடக்க உள்ள இந்த சுற்றுலாவில் 10 நிமிடங்கள் கொண்ட சுற்றுலா நடைபெற உள்ளது.   பயணிகல் விரும்பினால் அவர்கள் வீட்டுக்கு மேல் வெகு அருகில் பறக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.   கோவையை சுற்றி உள்ள மருதமலை, ஈஷா, வெள்ளியங்கிரி மலை போன்ற பகுதிகளை வானில் இருந்து காண முடியும்” என தெரிவித்துள்ளார்.