காட்மண்டு

லகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைய 200 பேர் சென்றுள்ளதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் உயர்ந்த மலை இமயமலை ஆகும். இந்த இமயமலை இந்தியா, நேபாள் உள்ளிட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம் இமயமலையில் அமைந்துள்ளது. இமயமலையில் ஏறி எவரெஸ்ட் சிகரத்தை அடைவதை மலை ஏறுபவர்கள் ஒரு சாதனையாக கருதுகின்றனர். ஒவ்வொரு வருடமும் கோடைக் காலங்களில் எவரெஸ்ட் சிகரத்தை அடைய ஏராளமானோர் வருவது வழக்கமாகும்.

கடந்த 14 ஆம் தேதி அன்று நேபாள அரசு இந்த எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பாதைய திறந்தது. அதை ஒட்டி அன்று மட்டும் எட்டு பேர் கொண்ட குழுவினர் இந்த வருடத்தின் முதல் குழுவாக சிகரத்தை அடைந்தனர். அது முதல் மலை ஏறுபவர்கள் தொடர்ந்து இங்கு வந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து தங்கள் வாழ்நாள் சாதனையை நிகழ்த்தி வருகின்றனர். இந்த பாதை வரும் ஜூன் கடைசி வரை திறந்திருக்கும்.

இந்நிலையில் ஒரே நாளில் 200 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக நேற்று மலையில் ஏறி உள்ளனர். நேற்று இங்கு வெப்பநிலை மிகவும் நன்கு இருந்ததால் யாரும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இல்லாமல் இருந்துள்ளது. எனவே எவரெஸ்ட் சிகரத்தை அடைய கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதை ஒட்டி ஒவ்வொரு குழுவும் இடையில் நிறுத்தப்பட்டு மேலே உள்ளவர்கள் இறங்கிய பிறகு இவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.