சென்னை:
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது,
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், அக்டோபர் 29-ஆம் தேதி முதல் அடுத்த 3 நாள்க ளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அதிகரிக்கும்.
காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குகுடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் இடி, மின்னலு டன் கூடிய கன மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக தென் மாவட்டங்களை ஒட்டிய கடற்பகுதியில், 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும். எனவே, இந்த கடல் பகுதிகளுக்கு, இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.