தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் கடந்த சனிக்கிழமை கரையை கடந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழையால் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மழை வெள்ளத்துக்கு புதுவையில் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஒரே நாளில் 49 செ.மீ. மழைப்பதிவானது இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 51 செ.மீ. மழை பதிவானது.
இந்த மழை வெள்ளத்தால் அதிர்ஷ்டவசமாக விழுப்புரத்தில் எந்த உயிர் சேதமும் இல்லை என்றபோதும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேர் மற்றும் வேலூர் மற்றும் சென்னையில் தலா ஒருவர் மழையால் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததை அடுத்து மலையில் இருந்து பாறை உருண்டு விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் மலையடிவாரத்தில் இருந்த வீடுகள் சேதமடைந்தன.
இதில் 7 பேர் நிலச்சரிவில் சிக்கியுள்ள நிலையில் இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புயல் நேற்று மாலை வலுவிழந்தபோதும் தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது, நேற்றிரவு ஊத்தங்கங்கரையில் 50 செ.மீ. மழை கொட்டியது.