சென்னை: கனமழையால் சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து  சென்னை யானைக்கவுனி, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கிடையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்படும் இடங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைந்துள்ளது.  இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.  நாளையும் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும், நாளை (அக்டோபர் 16ஆம் தேதி)  டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையின் மழை பாதிப்புகள் குறித்து துணைமுதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் பல பகுகிதளில் நேரிடையாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து,   வடசென்னையின் பேசின் பிரிட்ஜி யானைகவுனி பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

வடசென்னை பகுதியான யானைக்கவுனி பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பேசின்பிரிஜ் உள்பட பல பகுதிகளில் ஆய்வு செய்தார். முதலமைச்சர்  உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

இதற்கிடையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்படும் இடங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.  தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்படப் பகுதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும், மழையால் பாதிக்கப்படும் இடங்களை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் தடுப்பு சுவர் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு,  “தாம்பரம் மாநகராட்சியை பொருத்தவரையில் அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் மற்றும் தேவையான உணவு பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. தாம்பரம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் அத்தனை மாநகராட்சிகளிலும் மழை முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு இடங்கள் தயார் நிலையில் உள்ளது ” எனத் தெரிவித்தார்.