ஐதராபாத்:

நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆங்காங்கே மழைகளும் பொழிந்து வருகின்றன.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில்  சூறாவளி காற்றுடன்  பெய்த கனமழை காரணமாக ஏராளமான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன.

பலத்த சூறை காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கனமழைக்கு ஆந்திராவில் மட்டும் 8 பேர் உயிரிழந்த நிலையில், தெலுங்கானாவில் 2 பேர் உயிரழந்தனர். இதன் காரணமாக உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மழை  காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தாக்காளி, நெல் உள்ளிட்ட பயிர்களும் சேதமானதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர்.